சிம்புவின் அடுத்த படமான ‘STR 48′ படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அனிருத் இசையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பான் இந்திய அளவில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது.

தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்தப் படம் குறித்து பேசியுள்ளார்.
“இந்தப் படம் வரலாற்று ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும். நிறைய மாஸ் காட்சிகள் இருக்கும்.
இந்தப் படத்திற்காக சிம்பு தாய்லாந்திலும் இப்போது லண்டனிலும் தற்காப்புக் கலைப் பயிற்சியை தீவிரமாக செய்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நீங்கள் சிம்புவின் மற்றொரு பக்கத்தைக் காண்பீர்கள். இது ஒரு ஆச்சரியமாக இருக்கும்.

எனது முதல் படத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வகையிலான கதைக்களத்தை உருவாக்க விரும்பினேன். எனவே தான் இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தேன். பெரிய பட்ஜெட் படம் என்பதால் ப்ரீ புரொடக்ஷனுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.


