- Advertisement -
வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமா?- அமைச்சர் விளக்கம்
வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

2023- 2024 ஆம் ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வியாண்டு நாட்காட்டியில், தமிழகத்தில், 1 முதல் 5 வகுப்பு வரை பள்ளிகள் – ஜூன் 5 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் – ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
