Homeசெய்திகள்தமிழ்நாடு"மாம்பழம் சின்னம்" விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி...

“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை

-

- Advertisement -

“மாம்பழம் சின்னம்” யாருக்கு? – ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2 நாட்களுக்குள் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறும், அவர்களின் மனுக்கள் மீது 3 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."மாம்பழம் சின்னம்" விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவைஇந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான “பாட்டாளி மக்கள் கட்சி”, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பிலான ஒரு அணியாகவும் ராமதாஸின் மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு “மாம்பழம்” சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பியதால் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அங்கீகரித்தது விட்டது என்று அன்புமணி தரப்பினர் கொண்டாடினர்கள்.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்போ, அன்புமணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யவும், அந்த கடிதத்தை தனக்கு அனுப்ப இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது உட்கட்சி பிரச்சனை தீரும் வரை தேர்தலை தள்ளி வைக்க முடியாது என தெரிவித்து இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் வழக்கை விசாரித்த நீதிபதிகள்.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜோய் மால்யா பட்க்சிஅமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், கட்சி தொடர்பான வழக்கு மற்றும் சின்னம் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ள நிலையில் கட்சி யாருக்கு என்ற முடிவு தெரியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த விவகாரத்தில் பிரச்சனை எழும் பட்சத்தில் சின்னம் முடக்கப்படும் என தெரிவித்ததையும் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார் விகாஸ் சிங். அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரம் என்பது எங்களுக்கு குடும்பப் பிரச்சனை போல தெரிகிறது! என்று கருத்து தெரிவித்ததுடன் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதா? என்னும் கேள்வி எழுப்பினார்.  இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று ராமதாஸ் தரப்பு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ஏற்கனவே சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது என பதிலளித்தார்.

தொடர்ந்து அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்பதால் சின்னம் தொடர்பாகவோ கட்சியின் உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாகவோ அல்லது விதிமுறைகள் தொடர்பாகவோ தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் தான் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்க அறிவுறுத்தல் முன்பு வழங்கி இருந்தது என்றும், அதன் அடிப்படையிலே தங்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டதாக வாதம் முன் வைத்தனர். ஆனால் ராமதாஸ் தரப்பு, கட்சிக்குள் உரிமை கோரல் பிரச்சனை ஏற்பட்டு விட்டால் குறிப்பிட்ட அந்த சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கி வைக்க வேண்டும் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் அடிப்படை விதிமுறை.

ஆனால் அதனை செய்யாமல் தேர்தல் ஆணையம் ஒரு தரப்புக்கு மட்டும் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது என்றதோடு ஒருவேளை சின்னம் யாருக்கும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்றார் “குலுக்கல்” முறையில் யாருக்கு மாம்பழம் சின்னம் கிடைக்கின்றதோ அவர்களுக்கு சின்னம் சென்று சேரும். ஆனால் அதையும் தேர்தல் ஆணையம் கடைபிடிக்கவில்லை என வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை இந்த விவகாரத்தில் தெளிவுபடுத்தி விட்டது! தங்களிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தான் தலைவராக இருக்கிறார் என கூறியுள்ளனர்.

எனவே இந்த விவகாரத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என்றதோடு அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியாது என்று தெளிவாக விதிகள் உள்ளது என்பதையும் குறிப்பிட்டனர். அதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல் ஆணையம் ஒரு கட்சிக்குள் பிரச்சனை எழுந்தால் தலையிடுவதற்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றங்களில் தெரிவித்துள்ளது என கேள்வி எழுப்பியதோடு, உரிமை குரல் விவகாரத்தில் முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினர். மேலும் ‘பாட்டாளி மக்கள் கட்சி’ சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மிகவும் பாதுகாப்பான முறையில் பிரண்ட்லி மேட்ச் விளையாடுவதாக கருத்து தெரிவித்தனர்.

மேலும் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது யார்? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணி தரப்பிடம் தான் பாமக கட்சி உள்ளபோது சின்னமும் தங்களிடமே உள்ளது. மேலும் சிவில் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பாகவே உயர்நீதிமன்றத்தை நாடி சின்னத்தை முடக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு கேட்டுக் கொண்டதாகவும் அன்புமணி தரப்பு குற்றம் சாட்டினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ் தரப்பு, முதலில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சின்னத்தை தன் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்து மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் இதில் நாங்கள் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் கூறிய பிறகே சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக விளக்கமளித்தனர். இரு தரப்பு வாதங்களை விரிவாக கேட்டுக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக மீண்டும் சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள், 2 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

மேலும் இரு தரப்பினரின் மனுக்கள் மீது சிவில் நீதிமன்றம் அடுத்த 3 நாட்களுக்குள்  விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்த பிறகு கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பை நோக்கி,  நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது எனவும் சிரித்தபடி கூறினார்.

புதுச்சேரி: ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

MUST READ