Homeசெய்திகள்தமிழ்நாடு“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்

“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்

-

- Advertisement -

மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 க்கு மேல் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் ஆவணம் காண்பித்தாலும்  போதும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகளால், பொதுமக்கள் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். குறிப்பாக அவசர மருத்துவ தேவைகளுக்காக அதிக தொகை பணம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் போது, உரிய ஆவணங்கள் இருந்தால் ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

மேலும், அந்த ஆவணங்களை நேரடியாக காகித வடிவில் மட்டும் அல்லாமல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் டிஜிட்டல் வடிவிலும் காட்டலாம் என்பதும் முக்கிய தளர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கையேடு வெளியீட்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் வாக்காளர் தகுதி குறித்த விரிவான கையேடும் வெளியிடப்பட்டது.

தேர்தல் காலத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது கண்காணிப்பு கடுமையாக இருப்பது வழக்கம். ஆனால் மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்காக மக்கள் சிரமப்படாமல் இருக்க இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம், அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் தேவையான பணத்தை எடுத்துச் செல்லும் வசதி எளிதாகும் என்றும், அதே நேரத்தில் தேர்தல் விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 151 கோடி பறிமுதல்…தேர்தல் தலைமை அதிகாரி தகவல்…

MUST READ