தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும்,ப்சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அதில் 20 புகார்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து புகார்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினாா். மீதம் உள்ளவர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவிற்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அடையாள அட்டை வழங்கும் பணியை வரைவு படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தாா்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், தேர்தலில் வாக்கு பதிவு சதவிதத்தை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
