spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னோட ஆள் யாருனு சீக்கிரமே சொல்றேன்... காதல் பிடியில் கீர்த்தி சுரேஷ்!?

என்னோட ஆள் யாருனு சீக்கிரமே சொல்றேன்… காதல் பிடியில் கீர்த்தி சுரேஷ்!?

-

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நல்ல வரவேற்பு பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

we-r-hiring

நடிகை என்றாலே காதல், கல்யாணம் உள்ளிட்ட கிசுகிசுக்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியுமா என்ன? கீர்த்தி சுரேஷும் அதற்கு விதிவிலக்கல்ல.

இடையில் கூட அனிருத்துடன் கீர்த்தி டேட்டிங் செய்து வருவதாக பல செய்திகள் வெளியாகி பின்னர் அதை மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தனது காதலர் குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார்.

“இந்த முறை எனது அருமையான நண்பர்களை நான் இதற்குள் இழுக்க வேண்டியதில்லை. எனது மர்மமான மனிதரை நான் விரைவில் வெளிப்படுத்துவேன். அதுவரை நான் மிகவும் ஜாலியாக இருக்க விரும்புகிறேன். நான் ஒரு முறை கூட இதை சரியாக செய்யவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் பதிலின் மூலம் அவர் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாக தெரிகிறது. அது யார் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

MUST READ