Homeசெய்திகள்தமிழ்நாடுராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு! பணம் அனுப்ப வேண்டாம் என எச்சரிக்கை!

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு! பணம் அனுப்ப வேண்டாம் என எச்சரிக்கை!

-

- Advertisement -

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

அதிகாரிகளின் பெயர்களையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் போலி வாட்ஸ்அப் கணக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பெயரில் ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி!

சமீபகாலமாக சைபர் குற்றவாளிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப் முகப்புப் படமாகப் பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர்.

பின்னர், அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அவசரத் தேவைக்குப் பணம் அனுப்புமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். இத்தகைய மோசடி ‘பாஸ் ஸ்கேம்’ (Boss Scam) என அழைக்கப்படுகிறது.

இதேபோன்று, ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் எண்ணிலிருந்து செய்திகள் அனுப்பப்பட்டு மோசடி செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எச்சரிக்கை

இந்தச் சம்பவம் குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அந்த எண்ணை நம்பிப் பணம் அனுப்பவோ தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அந்தப் போலி வாட்ஸ்அப் எண்ணைத் தடைசெய்யும் வகையில் ‘பிளாக்’ செய்யவும், மோசடி தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

போலி கணக்குகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

ஏற்கனவே ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களிலும் புகைப்படங்களிலும் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டு மோசடி முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

தற்போது ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பெயரிலும் போலியான வாட்ஸ்அப் கணக்கு மூலம் மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

அறிமுகமான நபரின் பெயர் மற்றும் புகைப்படத்தில் இருந்து செய்தி வந்தாலும், பணம் அனுப்புவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரை நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் திறக்கவோ, வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஓடிபி போன்ற ரகசியத் தகவல்களைப் பகிரவோ கூடாது.

வெற்றிப் பயண திட்டத்தால் நிதி நெருக்கடியில் போக்குவரத்துக் கழகம்! ஊழியர் முன்னேற்ற சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

MUST READ