Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவைக்...

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

-

- Advertisement -

இந்தக் கூட்டத்தில் சமூகநீதி சர்வே, நெடுஞ்சாலைத் துறை சார்ந்த முடிவுகள், தொழில் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

சமூகநீதி சர்வே குறித்து ஆலோசனை

we-r-hiring

அமைச்சரவைக் கூட்டத்தில் சமூகநீதி சர்வே தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அதுதொடர்பான முடிவுகள் குறித்து அமைச்சர்கள் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை முடிவுகள்

நெடுஞ்சாலைத் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவது தொடர்பான முடிவுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. துறை சார்ந்த முக்கிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை விவாதித்து முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் முதலீடுகள், நிர்வாகம் குறித்தும் விவாதம்

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராசிரியர் கலையரசன் மீதான காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது! – எஸ்டிபிஐ கடும் கண்டனம்

MUST READ