Homeசெய்திகள்சினிமா‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!’ – ஜோதிகாவைப் புகழ்ந்து நெகிழ்ந்த நடிகர் சூர்யா!

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!’ – ஜோதிகாவைப் புகழ்ந்து நெகிழ்ந்த நடிகர் சூர்யா!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா குறித்து திரைப்பட விழாவில் பேசிய நெகிழ்ச்சியான கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

we-r-hiring

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜோதிகாவைப் புகழ்ந்து பேசிய சூர்யா

விழாவில் பேசிய சூர்யா, “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தனது வாழ்க்கையில் இன்று இந்த நிலையை அடைந்திருப்பதற்கும், சரியான பாதையில் பயணிப்பதற்கும் ஜோதிகாவின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் என்றும் தெரிவித்தார்.

தான் வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்திருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து தனக்கு உறுதுணையாக நின்று வழிநடத்தியவர் ஜோதிகா என்று சூர்யா பெருமையுடன் கூறினார். மேலும், ஜோதிகா சிறந்த தாய், சிறந்த தோழி, மிகச்சிறந்த வாழ்க்கைத்துணை மட்டுமல்லாமல் வலிமையான பெண் என்றும் பாராட்டினார்.

சூர்யாவின் பேச்சுக்கு ஜோதிகா அளித்த ரியாக்ஷன்

சூர்யா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா மகிழ்ச்சியுடன் அவரைப் பார்த்து முத்தங்களைப் பறக்கவிட்டார். இந்த அழகான தருணம் அரங்கில் இருந்த ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

தங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு வழிவிடும் வகையில் தனது படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க முடிவு செய்த நடிகர் தனுஷுக்கு சூர்யா விழாவில் நன்றி தெரிவித்தார்.

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வர தயாராகும் கரகாட்டக்காரன்!

MUST READ