நடுக்கடலில் நின்ற மர்ம படகு – சுற்றி வளைத்த போலீசார்
தூத்துக்குடி அருகே போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆறு பேரை நடுக்கடலில் வைத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தூத்துக்குடி கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த ரோந்து பணி குஜராத்தில் இருநூறு கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் என கூறப்பட்டது.

அப்போது நடுக்கடலில் சுமார் இருநூறு மைல் தொலைவில் நின்று கொண்டிருந்த மர்ம படகை சுற்றி வளைத்த போலீசார் படகில் இருந்த ஆறு பேரை கைது செய்தனர்.

படகில் போதை பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில் ஆறு பேரையும் விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்து சென்றனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட படகு தருவகுளம் அருகே தரை தட்டி மணலில் சிக்கிய நிலையில் அதை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.