விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ரணபாலி’. இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் அர்னால்ட் போஸ்லூ, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜய்-அதுல் இசையமைத்துள்ளனர். 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராயலசீமா பகுதியில் நடந்த கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராவான ஆக்சன் மற்றும் ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், பிரம்மாண்டமான மேக்கிங் மற்றும் பாடல்களுக்காக ரசிகர்களிடம் பரவலான கவனத்தைப் பெற்ற ‘ரணபாலி’, தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதால் ஓடிடி பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் பார்க்கத் தவறவிட்டவர்களுக்காகவும், மீண்டும் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களுக்காகவும் ‘ரணபாலி’ திரைப்படம் வருகிற நவம்பர் 13-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
