Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி - இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார் எடப்பாடி?

அதிமுகவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார் எடப்பாடி?

-

- Advertisement -

"மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?" - எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!
தமிழக அரசியல் களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மீண்டும் ஒரு கடுமையான உட்கட்சிப் புயலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது.

கடந்த காலங்களில் ‘இபிஎஸ்  Vs சசிகலா’ என்று இருந்தது. பின்னர் ‘ஓபிஎஸ், இபிஎஸ் Vs சசிகலா’ என்றும், ‘இபிஎஸ் Vs சசிகலா, டிடிவி தினகரன் மற்றும்   ஓபிஎஸ் Vs இபிஎஸ் ’ எனத் தொடர்ச்சியான அதிகார மோதல்களைச் சந்தித்த அதிமுக, தற்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கிடையேயான புதிய உள்முரண்பாடுகளால் மேலும் தத்தளித்து வருகிறது.

we-r-hiring

சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களின் முடிவுகள் அதிமுகவிற்குப் பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து, தேர்தல் களத்தில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் அபாய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ள சூழலில், “இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்கப்போவது எப்படி?” என்ற கேள்வி தொண்டர்களிடையே கொழுந்துவிட்டு எரிகிறது.

பொதுக்குழு கூட்டம்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஆண்டிற்கு ஒருமுறையாவது கட்சியின் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 31-க்குள் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது.
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்: நிர்வாகிகள் வருகை குறைந்ததால் இபிஎஸ் அதிர்ச்சி!

ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை ‘பொதுக்குழு’ என்றாலே கடந்த காலங்களில் மேடையில் தண்ணீர் பாட்டில்கள் பறப்பதும், ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடிப்பதுமான அனல் பறக்கும் சம்பவங்களே நினைவுக்கு வருகின்றன. இம்முறையும் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்கள், பொதுக்குழுவில் பெரும் வெடிப்பை ஏற்படுத்துமா என்ற பீதி கட்சி நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.

ஒருபுறம் சி.வி. சண்முகம், வேலுமணி போன்ற கட்சியின் முக்கியத் தூண்கள் தரப்பில் எழும் சலசலப்புகள், மறுபுறம் மறைமுகமாகத் துரோகம் செய்யத் துடிக்கும் உட்கட்சி எதிரிகள் என அனைவரையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

எனினும், எத்தகைய அரசியல் சூழ்ச்சிகளையும் சவால்களையும் முறியடிக்கும் நோக்கில், மிகவும் கச்சிதமான மற்றும் கடுமையான வியூகங்களை வகுத்து எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். வரும் பொதுக்குழுவில் எதிர்ப்பாளர்களைத் தவிடுபொடியாக்கி, அதிமுகவை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவாரா எடப்பாடி? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!

MUST READ