Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற புதிய விதிமுறைகள் – 9 ஆவணங்கள் சமர்ப்பிக்க தமிழக...

விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற புதிய விதிமுறைகள் – 9 ஆவணங்கள் சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்கான விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற புதிய விதிமுறைகள் – 9 ஆவணங்கள் சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவு!

இதன்படி, விளைநிலங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும், நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான நடைமுறைகளிலும் 9 வகையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

கட்டுமானம் மேற்கொள்ள சமர்ப்பிக்க வேண்டிய 9 ஆவணங்கள்:

1. கிரயப் பத்திரம் அல்லது விற்பனைப் பத்திரம்
2. பட்டா நகல்
3. வடிகால் வரைபடம்
4. தள வரைபடம்
5. நில அமைப்பு வரைபடம்
6. 500 மீட்டர் சுற்றளவைக் காட்டும் வரைபடம்
7. அரசு அல்லது புறம்போக்கு நிலம் இல்லை என்பதற்கான சான்று
8. சிட்டா நகல்
9. அடங்கல் சான்று

இந்தத் திருத்தத்தின் மூலம் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான விண்ணப்ப நடைமுறையில் ஆவணங்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நிலத்தின் உரிமை, அமைவிடம், வடிகால் வசதி மற்றும் சுற்றுப்புற நில விவரங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இந்தப் புதிய விதிமுறை விவசாய நிலங்களில் கட்டுமானம் மேற்கொள்ள விரும்புவோரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

விழுப்புரம் வி.சாலையில் சேதமடைந்த கல்வெட்டு – புதிய கல்வெட்டை நிறுவிய அமைச்சர் ஆனந்த்!

MUST READ