திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரின் வீட்டில் சுமார் 160 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனக் கூறப்படுகிறது.
கோட்டூர் அருகே வசித்து வரும் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் கோவிந்தராஜ், பெங்களூருவில் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, தனது வீட்டில் 160 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் நடைபெற்ற இந்த நகைக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
