Homeசெய்திகள்சினிமாநோ அட்வான்ஸ்... நோ சேலரி... நடிகர் விஷால் எடுத்த அதிரடி முடிவு!

நோ அட்வான்ஸ்… நோ சேலரி… நடிகர் விஷால் எடுத்த அதிரடி முடிவு!

-

- Advertisement -

நடிகர் விஷால் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.நோ அட்வான்ஸ்... நோ சேலரி... நடிகர் விஷால் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘மகுடம்’. அவரே இயக்கி நடித்திருந்த இத்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் பாக்ஸ் ஆபீஸில் சரிவைச் சந்தித்தது.
​இதைத் தொடர்ந்து, நடிகர் விஷால் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் ‘புருஷன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘மகுடம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து உருவாகி வரும் இந்த ‘புருஷன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
​’புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவரும் என ஏற்கனவே அப்டேட் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தது விஷால் பிரபல தயாரிப்பாளர் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஷால் புதிய திரைப்படத்தில் இணையவுள்ளாராம்.நோ அட்வான்ஸ்... நோ சேலரி... நடிகர் விஷால் எடுத்த அதிரடி முடிவு!​இத்திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, படத்தின் முழுமையான திரைக்கதை தயாரான பிறகே படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் லலித் குமார் மிகவும் உறுதியாக இருக்கிறாராம்.
​அதேபோல, ‘புருஷன்’ படத்திற்கு அடுத்து தொடங்கும் இத்திரைப்படத்திற்காக நடிகர் விஷால் ஒரு மிகப்பெரிய அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். இப்படத்தில் நடிப்பதற்காக அவர் எந்தவித முன்பணமோ அல்லது குறிப்பிட்ட சம்பளமோ வாங்க மறுத்துள்ளாராம். அதற்குப் பதிலாக, படத்தின் லாபத்தில் மட்டுமே பங்கு என்ற ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
​அதாவது, படத்தின் வெற்றி மற்றும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வரும் லாபத்தை மட்டுமே தனது சம்பளமாக பெற்றுக்கொள்ள விஷால் சம்மதித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

MUST READ