Homeசெய்திகள்சினிமாதொடர் வெற்றிகளை குவிக்கும் சூர்யா.... 'சீன்' படக்குழு வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தொடர் வெற்றிகளை குவிக்கும் சூர்யா…. ‘சீன்’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

சூர்யாவின் சீன் படம் குறித்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.தொடர் வெற்றிகளை குவிக்கும் சூர்யா.... 'சீன்' படக்குழு வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூர்யாவிற்கு இடை இடையே சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. கங்குவா’ திரைப்படம் வரையிலான சரிவுகளுக்குப் பிறகு, தற்போது தனது கதைத் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி பாக்ஸ் ஆபீஸில் தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறார் சூர்யா. அவர் நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் வேட்டையைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
இந்த வரிசையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த ‘சீன்’ திரைப்படம் தற்போது உலகளவில் வசூல் மழை பொழிந்து வருகிறது. 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ழகரம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம், திரையிட்ட மூன்றே நாட்களில் ரூ. 145 கோடி வசூல் மைல்கல்லை நெருங்கியுள்ளதாகத் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தொடர் வெற்றிகளை குவிக்கும் சூர்யா.... 'சீன்' படக்குழு வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து ‘சீன்’ திரைப்படமும் தொடர்ச்சியாக 3-வது ஹாட்ரிக் மெகா பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளதால், சூர்யாவின் ரசிகர்கள் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கொண்டாட்டங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இன்னும் சில நாட்களிலேயே இப்படம் ரூ. 500 கோடியை எட்டிவிடும் என்று நம்பப்படுகிறது.

MUST READ