தனுஷின் ஓம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.
‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ், மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் ‘ஓம்’.
ஏற்கனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்த நிலையில், சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு எகிற வைத்தது. இதற்கிடையில் அடுத்தடுத்து வெளியான பாடல்கள் அனைத்தும் இணையத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில், தற்போது ‘ஓம்’ திரைப்படத்திலிருந்து ‘ஃபா ஃபா ஃபா ‘ என்ற புத்தம் புதிய பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையில் உருவான இப்பாடலை பாடலாசிரியர் தமிழ் ஆதவன் எழுத, சாய் அபியங்கர் மற்றும் தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ளனர். எழில் அரசுவின் துடிப்பான ஒளிப்பதிவிலும், சாய் அபியங்கரின் இசையிலும், தமிழ் ஆதவனின் மாஸான வரிகளிலும் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திரை உலகினர் மற்றும் அனைவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
