spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்காதீர்கள்- ஜெகன்மோகன்

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்காதீர்கள்- ஜெகன்மோகன்

-

- Advertisement -

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்காதீர்கள்- ஜெகன்மோகன்

ஜனநாயகத்தின் கோயிலாக பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நமது நாட்டு மக்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது. இந்த விழாவை புறக்கணிக்க வேண்டாம் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!
File Photo

இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரமாண்டமான, கம்பீரமான, விசாலமான நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். நாடாளுமன்றம், ஜனநாயகத்தின் கோயிலாக இருப்பதால், நமது தேசத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது. நமது நாட்டு மக்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது. இத்தகைய மங்களகரமான நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வில்லை.

we-r-hiring

அனைத்து அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பெருமைமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் உண்மையான உணர்வில், எனது கட்சி இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கின்றன என்பது கவனிக்கதக்கது.

MUST READ