Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – டிசம்பர் 11 வரை பெயர் சேர்க்க, நீக்க,...

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – டிசம்பர் 11 வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யலாம்!

-

- Advertisement -

மாவட்ட வாரியாக வெளியிட்ட அதிகாரிகள்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளை (SSR) முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – டிசம்பர் 11 வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யலாம்!

டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்

we-r-hiring

வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் புதிதாகப் பெயர் சேர்க்கவும், தவறான பதிவுகளை நீக்கவும், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் டிசம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களைப் பெறுவதற்காக விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது விவரங்களைச் சரிபார்த்து, தேவையான மாற்றங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச Shoes, Socks, Sweater, Raincoat – ரூ.52 கோடியில் 4 மெகா டெண்டர்கள் வெளியீடு!

MUST READ