பராமரிப்பில்லாத உடுமலை நகராட்சி பூங்கா
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி நான்காவது வார்டு பகுதியில் அபிராமி நகர் உள்ளது. இங்கு குழந்தைகள் பயன்பெறும் வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் பூங்காவிற்கு சென்று நடை பயிற்சியில் ஈடுபட்டனர். குழந்தைகளும் அங்கு அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் பூங்காவில் முறையான பராமரிப்பு வேலை மேற்கொள்ளவில்லை. இதனால் பூங்காவில் புதர், காடு, புல் மண்டி உள்ளதுடன் உபகரணங்களும் சேதம் அடைந்து வருகிறது.

வணிக வளாகத்தில் மின் கசிவால் தீ விபத்து
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, பூங்காவில் புதர். காடு, புல் மண்டி கிடப்பதால் அங்கு விஷபூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் குழந்தைகளை பூங்காவிற்கு விளையாட மறுத்தனர்.

எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் உள்ள அபிராமி நகரில் அமைக்கப்பட்ட பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தனர்.