Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராதிகா வலியுறுத்தல்!

சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராதிகா வலியுறுத்தல்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் விவகாரத்தில், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ராதிகா வலியுறுத்தியுள்ளார்.சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராதிகா வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் பொறுப்புணர்வும் அக்கறையும் இல்லாமல் பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என விமர்சித்தார். மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்தை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

we-r-hiring

குற்றச்சாட்டை நியாயப்படுத்திப் பேசுவதா?

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் நியாயப்படுத்திப் பேசுவதை ஏற்க முடியாது என்று ராதிகா கூறினார். மாவட்ட ஆட்சியருக்கு எதிராக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பொறுப்பு அமைச்சர் தலையிட்டிருக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள வன்னியரசு, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட்டிருக்க வேண்டும் என்று ராதிகா தெரிவித்தார்.

பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசப்பட்டு வரும் நிலையில், பொறுப்பு அமைச்சர் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கடந்து செல்வது பொருத்தமானதல்ல என்றும் அவர் விமர்சித்தார்.

முதலமைச்சர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தச் சம்பவத்தில் முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகத் தோன்றுவது மிகவும் மோசமானது எனக் குறிப்பிட்ட ராதிகா, சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்தும், நாட்டாமைத்தனமும் தேவையில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி விவகாரம்: தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலபாரதி வலியுறுத்தல்!

MUST READ