
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் கரூர் மாவட்டம், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று (மே 26) காலை 07.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சென்னையில் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தி வருவதால், சோதனை நடைபெறும் இடங்களில் காவல்துறைப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
