spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை"- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!

“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!

-

- Advertisement -

 

"ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை"- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!
Photo: Amul Milk

தமிழகத்தில் அமுல் நிறுவனம் (Amul Milk), பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

we-r-hiring

ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்

இந்த நிலையில், அமுல் நிறுவனத்தின் தமிழக ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாகக் கூறும் தகவல் பொய்யானது. விவசாயிகளின் பாதிப்பைத் தடுக்கவே அமுல் செயல்படும்; ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது. தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது; 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது.

பால் கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்கிறோம். ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் நபர்கள், அமுல் நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் திடீர் மறியல் – போக்குவரத்து பாதிப்பு

விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் குறைந்த விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ