நவம்பர் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளிலும், ஓடிடி தளத்திலும் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கும் படங்களின் விவரங்கள் இதோ:
ஓ.எம் (O.M)
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘ஓ.எம்’ (O.M). மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
சத்தியவான் சாவித்திரி
இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. இந்த படத்தில் இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏஓடி (AOT)
இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏஓடி’ (AOT). துல்கர் சல்மானின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள இப்படமும் நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
அப்பா குட்டி
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. அப்பா மற்றும் மகள் ஆகிய இருவருக்குமான பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு, எமோஷனல் கலந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அன்பில் அவன்- (OTT வெளியீடு)
இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது நவம்பர் 20-ஆம் தேதி முதல் சோனி லைவ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
