Homeசெய்திகள்சென்னைபேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பயணிகள் அலறியடித்து ஓட்டம் – 2 பேர்...

பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பயணிகள் அலறியடித்து ஓட்டம் – 2 பேர் கைது!

-

- Advertisement -

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் தற்காலிக நடத்துநரைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அரசு பேருந்தின் தற்காலிக நடத்துநரான நித்தியநாதன் தாக்கப்பட்டுள்ளார். தேவர் ஜெயந்தியின்போது அவரது நண்பருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக, நண்பருக்குப் பதிலாக நடத்துநர் நித்தியநாதனை குறிவைத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. பேருந்து நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் பட்டப்பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நடத்துநர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து நடத்துநர் நித்தியநாதன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் பட்டப்பகலில் அடுத்தடுத்து 3 கொலைகள்: ஒரே நாளில் நடந்த சம்பவங்களால் அதிர்ச்சி!

MUST READ