Homeசெய்திகள்உலகம்ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சி.ஏ. தேர்வில் முதலிடம்! – மோசடியை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்த தென்கொரிய...

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சி.ஏ. தேர்வில் முதலிடம்! – மோசடியை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்த தென்கொரிய இளைஞர்!

-

- Advertisement -

தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) தேர்வில் மோசடி செய்து முதலிடம் பிடித்த இளைஞர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் பட்டயக் கணக்காளர் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் ஹான் (34) என்ற இளைஞர் முதலிடம் பிடித்தார்.

குறிப்பாக, இரண்டாம் கட்டத் தேர்வில் மொத்தம் 160 கேள்விகளில் 159 கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்திருந்தார். இதனால் அவரது தேர்ச்சி குறித்து சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, தேர்வில் மோசடி செய்ததை ஹான் ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். தேர்வறைக்குள் மறைத்து எடுத்துச் சென்ற நுண்ணிய கேமரா மூலம் கேள்விகளைப் படம்பிடித்து, அவற்றை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனுப்பி விடைகளைப் பெற்றுள்ளார்.

பின்னர் அந்த விடைகளைப் பயன்படுத்தித் தேர்வெழுதியதைத் தனது யூடியூப் சேனல் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது தேர்ச்சி சான்றிதழை ரத்து செய்வதுடன், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேர்வு எழுதத் தடை விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வில் மோசடி செய்த சம்பவம் தென்கொரியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டோ ராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்ததாக அமெரிக்க வீரர் கைது? ரஷ்யாவுக்கு ராணுவத் தகவல்கள் அனுப்பியதாகக் குற்றச்சாட்டு!

MUST READ