கவின் நடிப்பில் வெளியாகி வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது..
இந்நிலையில் கவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அயோத்தி நடிகை ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்நிலையில் அனிருத் தன் படத்திற்கு இசையமைப்பது தன் வாழ்நாள் கனவு நனவானதாக கவின் தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையில், நான் இப்போது உணரும் பெரும் நன்றியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனக்கு எப்போதுமே பெரிய மற்றும் சிறிய கனவுகள் இருந்தன, அவை எப்போதாவது நிறைவேறுமா என்று எப்போதும் நினைப்பேன்.

அப்படி ஒரு கனவு அனிருத் சார் என்னுடைய படத்தில் பாடியது, அதை இப்போது வரை நம்பமுடியவில்லை.
இப்போது, என் படத்திற்கு அவர் இசையமைக்கப் போகிறார் என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. என் வாழ்நாள் முழுவதுமான ஆசை நிறைவேறியது போல் இருக்கிறது.
முதன்முறையாக இந்த ஸ்டுடியோவிற்குள் நுழைவது, இது எங்கள் படத்திற்காக என்று நினைப்பதை என்னால் நம்பமுடியவில்லை.
இந்த வாழ்க்கைப் பாதைக்கு என்னை அழைத்துச் சென்ற பயணம், எனக்கு வந்த எண்ணற்ற வாய்ப்புகள், இவை அனைத்தும் விதியாக உணர்கிறது. இதற்காக நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சதிஷ் மற்றும் ராகுல்.
ஆனால் எனது தொழில் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக. என்னை நம்பி, என்னை ஆதரித்த, என் கனவுகளை நனவாக்க வாய்ப்பளித்த ஒவ்வொருவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். வருகை தந்த செண்பகமூர்த்தி சார் மற்றும் மிஷ்கின் சாருக்கு சிறப்பு நன்றி
உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும் அன்புடனும், இந்த திட்டத்தில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம், ஒன்றாக மேஜிக் நிகழ்த்துவோம்.
லைஃப் ல பெரிய பெரிய விஷயத்தலா லைஃப் ஏ டிசைட் பண்ணும்” என்று தெரிவித்துள்ளார்.