பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே, இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து அதற்கான e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் தமிழ்நாடு காவல்துறை புதிய இணையவழிச் சேவையை அறிமுகப்படுத்துகிறது.
இதுவரை புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையத்திற்குச் நேரில் செல்ல வேண்டியிருந்த நிலையில், இந்தப் புதிய வசதி மூலம் பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவே தங்களது புகார்களைப் பதிவு செய்து மின்னணு முறையில் e-CSR ரசீதைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தப் புதிய இணையவழிச் சேவையை இன்று (நவம்பர் 18) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.
இந்த வசதி நடைமுறைக்கு வருவதன் மூலம் பொதுமக்களின் நேரமும் பயணச் சிரமமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சிக்கு முன்பும் ரீல்ஸ்; ஆட்சிக்கு வந்த பிறகும் ரீல்ஸ்! தவெக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
