Homeசெய்திகள்தமிழ்நாடுசெம்மஞ்சேரியில் 124 ஏக்கரில் ஒலிம்பிக் நகரம் – விளையாட்டு உட்கட்டமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழக...

செம்மஞ்சேரியில் 124 ஏக்கரில் ஒலிம்பிக் நகரம் – விளையாட்டு உட்கட்டமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழக அரசு டெண்டர்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க ஆலோசகர்களைத் தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.செம்மஞ்சேரியில் 124 ஏக்கரில் ஒலிம்பிக் நகரம் – விளையாட்டு உட்கட்டமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழக அரசு டெண்டர்!

இதன்படி, சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 124 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் நகரம் அமைப்பது தொடர்பாகத் திட்டமிடவும், அதற்கான ஆலோசனைகளை வழங்கவும் தகுதியான நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும், சென்னை, திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் சிறப்பு விளையாட்டு மையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திட்டச் செயலாக்கம் தொடர்பாகவும் ஆலோசகர்கள் மூலம் மாஸ்டர் பிளான் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசகர்களைத் தேர்வு செய்வதற்காகத் தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், திட்டங்களுக்கான விரிவான திட்டமிடல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் பொய்ப் பிரசாரம் செய்கிறார் – துரை வைகோ குற்றச்சாட்டு; ரூ.40 கோடி பேரம், நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்தும் விமர்சனம்!

MUST READ