Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: சமணர்கள் விளக்கேற்றிய தூணா, நில அளவைக் கல்லா? – தமிழ்நாடு அரசின்...

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: சமணர்கள் விளக்கேற்றிய தூணா, நில அளவைக் கல்லா? – தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் குழப்பம் என அண்ணாமலை கேள்வி!

-

- Advertisement -

உயர்நீதிமன்றத்தில் ஒரு கருத்து; உச்சநீதிமன்றத்தில் வேறொரு கருத்தா?
2025-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூண் குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சமணத் துறவிகள் விளக்கேற்றப் பயன்படுத்திய இடம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: சமணர்கள் விளக்கேற்றிய தூணா, நில அளவைக் கல்லா? – தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் குழப்பம் என அண்ணாமலை கேள்வி!

ஆனால், தற்போது தவெக ஆட்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அந்தக் கட்டமைப்பு தீபத்தூண் அல்ல; நில அளவைக்காக அமைக்கப்பட்ட கல் என வாதிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்ணாமலை எழுப்பிய கேள்வி

ஒரே கட்டமைப்பைப் பற்றி இரண்டு நீதிமன்றங்களில் தமிழ்நாடு அரசு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகளை எவ்வாறு முன்வைக்க முடியும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக ஆட்சியிலும் தற்போதைய தவெக ஆட்சியிலும் முன்வைக்கப்படும் கருத்துகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவும், இது விவகாரம் குறித்த அரசுகளின் புரிதலில் உள்ள குழப்பத்தைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தொடரும் விசாரணை

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறுத்திவைக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.

நவம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய தூண் வேறு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதாகவும், அது தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல என்றும் வாதிட்டார்.

மேலும், இந்த உத்தரவு தொடர்ந்தால் நாடு முழுவதும் உள்ள நில அளவைக் கற்களுக்கும் மத அடையாளம் கோரும் சூழல் உருவாகலாம் என்றும் அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தர்கா தரப்பின் வாதங்களும் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளன.

கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்து, இஸ்லாமிய வழிபாட்டு உரிமைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!

MUST READ