Homeசெய்திகள்தமிழ்நாடு“தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி...

“தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

-

- Advertisement -

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரம் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். அதிகாரிகள் அரசின் ஒப்புதலின் அடிப்படையில்தான் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் எல்லை மீறி அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் பாலியல் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை என்றும், அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் விமர்சித்தார்.

முதலமைச்சர் மக்களைச் சந்திக்க வேண்டும்!

தமிழக முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் பொதுவெளியில் வந்து மக்களைச் சந்தித்தால்தான் அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பது தெரியவரும் என்றும் கூறினார்.

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் ஏன்?

தமிழக மக்களின் முக்கியப் பிரச்சினையாக காவிரி நீர் விவகாரம் இருந்து வரும் நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் உரிய முறையில் குரல் கொடுத்து எடுத்துரைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்துவதில் முதலமைச்சர் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரே கட்சியாகச் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்திற்கு மட்டும் ஏன் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

தமிழக அரசின் செயல்பாடுகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த இந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

ஆட்சிக்கு முன்பும் ரீல்ஸ்; ஆட்சிக்கு வந்த பிறகும் ரீல்ஸ்! தவெக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

MUST READ