HomeBreaking Newsதமிழக ஆளுநர் அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

-

- Advertisement -

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநராகப் பதவி வகித்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு இன்று (நவம்பர் 19) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் குழுவினர் அவருக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஆளுநரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார்‘‘ என்றும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தவெக அரசியலில் சலசலப்பு: ‘நிழல் முதல்வர்’ போலச் செயல்படுகிறாரா ஆதவ் அர்ஜுனா? பின்னணி என்ன?

MUST READ