Homeசெய்திகள்ஆன்மீகம்அண்ணாமலையாருக்கு அரோகரா– திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா மகா தேரோட்டம் கோலாகலம்!

அண்ணாமலையாருக்கு அரோகரா– திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா மகா தேரோட்டம் கோலாகலம்!

-

- Advertisement -

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம் நாள் நிகழ்வாக மகா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.அண்ணாமலையாருக்கு அரோகரா– திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா மகா தேரோட்டம் கோலாகலம்!

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, 117 ஆண்டுகள் பழமையான வெள்ளி ரதத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார்.

கைலாய வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்தத் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம் நாள் மகா தேரோட்டம் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 21-ம் தேதி நடைபெறும் மகா தேரோட்டம் – பஞ்ச ரதங்களுக்கும் கலசம் பொருத்தும் பணி நிறைவு

MUST READ