மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினரின் ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதையும், அப்பகுதியில் உள்ள அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகளையும் காரணமாகக் காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹவுதி தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரிப்பு:
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் ஆதரவு ஹவுதிகளின் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க நிலைகள் மீதான அச்சுறுத்தல்கள் கூடியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை:
பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பயணிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாகவும், மிகுந்த விழிப்புடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் வன்முறை: அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை !
