HomeBreaking Newsஉதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

-

- Advertisement -

திருவள்ளூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

திருவள்ளூர் அடுத்த வாணியஞ்சத்திரம் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் பேனர் கட்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் விரேந்தர் (22), வேலன் (30) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஆல்பர்ட் (22) என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியைக் கலைக்கக் கோருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது; பெண்கள் பாதுகாப்பில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு. வீரபாண்டியன்

MUST READ