நடிகர் மகேஷ் பாபு, ‘சீன்’ பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜித்து மாதவன், சமீபத்தில் சூர்யா நடிப்பில் ‘சீன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அதே சமயம், மகேஷ் பாபு, ராஜமௌலி இயக்கத்தில் தன்னுடைய 29-வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மகேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘வாரணாசி’ படத்திற்குப் பிறகு, மலையாள இயக்குநர் ஜித்து மாதவனுடன் புதிய படமொன்றில் இணைவது குறித்து மகேஷ் பாபு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாக இருப்பதாகவும், 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படம் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ‘ரோமாஞ்சம்’ ‘ஆவேஷம்’ , ‘சீன்’ ஆகிய படங்களைப் போலவே இந்த படத்தையும் இயக்குநர் ஜித்து மாதவன், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் ஒரு எனர்ஜெடிக் என்டர்டெய்னர் படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
