spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மரகத நாணயம்' இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்!?

‘மரகத நாணயம்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்!?

-

- Advertisement -

நடிகர் தனுஷ் மரகதநாணயம் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், தயாரிப்பு, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது உள்ளிட்டப் பன்முகத் திறமைகளை வெளிகாட்டி வருகிறார்.
மேலும் இவர் கோலிவுட்,டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அபார வளர்ச்சியடைந்துள்ளார்.

we-r-hiring

தற்போது தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், சதீஷ், நிவேதிதா, சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.

dhanush-as-director.jpg
இதைத்தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக ‘கட்டாகுஸ்தி’ பட இயக்குனரான செல்லா அய்யாவுவின் இயக்கத்திலும், ‘டாக்டர்’ பட இயக்குனரான நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தனுஷ், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் ‘வீரன்’ படத்தை இயக்கும் ஏஆர்கே சரவணனுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வீரன் படத்தின் பிரஸ் மீட் ஒன்றில் இயக்குனர் ஏஆர்கே சரவணன், மூன்று ஸ்டோரி லைன்களை தனுஷிடம் விளக்கியுள்ளதாகவும், வீரன் படத்தின் ரிலீஸுக்கு பிறகு தனுஷிற்கானா ஸ்கிரிப்ட் வேலையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ