Homeசெய்திகள்சட்டம்அன்பில் மகேஷ் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு: நீதிபதி அருள் முருகன்...

அன்பில் மகேஷ் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு: நீதிபதி அருள் முருகன் திடீர் விலகல்!

-

- Advertisement -

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையிலிருந்து நீதிபதி அருள் முருகன் திடீரென விலகியுள்ளார்.அன்பில் மகேஷ் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு: நீதிபதி அருள் முருகன் திடீர் விலகல்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்குவதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பையும் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்றும், மாநில காவல்துறையின் விசாரணைக்குப் பதிலாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அருள் முருகன் இந்த வழக்கின் விசாரணையிலிருந்து திடீரென விலகினார்.

இதையடுத்து, வேறு நீதிபதியுடன் அமர்ந்து தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை, புதிய அமர்வில் நடைபெற உள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் – சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

MUST READ