HomeBreaking Newsபாலக்காட்டில் துணிகரம்: துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு நகைக்கடையில் கொள்ளை!

பாலக்காட்டில் துணிகரம்: துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு நகைக்கடையில் கொள்ளை!

-

- Advertisement -

கேரளாவில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை – 20 பவுன் நகைகளை அள்ளிச் சென்ற 3 பேர் கும்பல்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு!பாலக்காட்டில் துணிகரம்: துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு நகைக்கடையில் கொள்ளை!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டப்பகலில் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி நகைக்கடையில் 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு மாவட்டம் பெரிங்கோட்டுக்குறிச்சியில் உள்ள நகைக்கடைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மூன்று இளைஞர்கள், அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

பின்னர் கடையில் இருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கொள்ளையடிக்கும் போது, ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் கும்பலைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார்.

இதனால் கடையில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதற்கிடையே, கொள்ளையர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே கத்தியைப் பிடுங்குவது தொடர்பாக தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கோட்டாயி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பட்டப்பகலில் ஆயுதங்களுடன் நுழைந்து நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ