அஜித்தின் டேர் டெவில் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இப்படம், அஜித்தை எப்படிச் செதுக்க வேண்டுமோ அப்படி செதுக்கி, அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விண்டேஜ் அஜித்தைக் காட்டி ரசிகர்களுக்குத் தரமான விருந்து படைத்தது.
மேலும், இப்படம் அஜித்தின் திரைப்பயணத்திலேயே அதிக வசூலை வாரிக் குவித்துப் பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில், இதே கூட்டணி மீண்டும் ‘டேர் டெவில்’ படத்திற்காக இணைந்துள்ளது. ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்துள்ளது.
இதனிடையே, ‘டேர் டெவில்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களைக் குஷியாக்கியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளும், அஜித்தின் மாஸும் ‘குட் பேட் அக்லி’ படத்தை விட பல மடங்கு அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை தந்துள்ள நிலையில், ‘டேர் டெவில்’ படத்தைத் திரையரங்குகளில் கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.
