கடந்த 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ என்ற வெப்தொடர் வெளியானது. ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருந்த இத்தொடரை புஷ்கர் – காயத்ரி தயாரித்திருந்தனர்.
இதில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் இணைந்து யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, சேத்தன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இத்தொடர், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப்தொடரில், யஷ்வந்த் ‘மணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரைச் சுற்றியே கதை நகர்வது போன்று வடிவமைக்கப்பட்டிருந்த இத்தொடர் பல்வேறு தரப்பினரிடையேயும் பாராட்டுகளையும், நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில், ‘வதந்தி 2’ வெப்தொடருக்கு பிறகு யஷ்வந்த் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘யூத்’, ‘மொத ராத்திரி’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்ற அனிஷ்மா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், நடிகர் பாலசரவணன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘யூத்’ படத்தைத் தயாரித்த பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இப்படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
