
வரும் ஜூன் 1- ஆம் தேதி முதல் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான விலை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!
மின்சார வாகனங்களைத் தயாரிக்க ‘FAME’ திட்டத்தின் கீழ் ஒரு கிலோ வாட் என்ற அலகு முறையில் ரூபாய் 15,000 மானியமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வந்த நிலையில், அவை வரும் ஜூன் 1- ஆம் தேதி முதல் 10,000 ரூபாயாக குறைக்கப்படுகிறது. இதையடுத்து, ‘FAME 2’ திட்டம் ஜூன் 1- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், இரு சக்கர மின்சார வாகனங்களின் விலை பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜூன் 15- ல் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!
தமிழகத்தில் மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை தற்போது அதிகரித்து வரும் நிலையில், மானியம் குறைப்பு காரணமாக, மின்சார வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.