Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்"- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!

“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!

-

- Advertisement -

 

"அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்"- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!
File Photo

எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்த தனக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி உதவி செய்ததாக மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது…..”- அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!

விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி முதல் தமிழ் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

சென்னை வந்திறங்கிய முத்தமிழ்ச்செல்விக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. தன்னை மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒருவர் காப்பாற்றினார். தான் தனித்துவிடப்பட்ட செய்தியை அறிந்தவுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹெலிகாப்டரை அனுப்பி வைத்து உதவினார்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகை!

அதைத் தொடர்ந்து, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து முத்தமிழ்ச்செல்வி வாழ்த்துப் பெற்றார்.

MUST READ