spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' படத்துல விவேக் கட்டாயம் இருப்பார்னு ஷங்கர் சொல்லிருக்காரு…. உறுதி அளித்த சித்தார்த்!

‘இந்தியன் 2’ படத்துல விவேக் கட்டாயம் இருப்பார்னு ஷங்கர் சொல்லிருக்காரு…. உறுதி அளித்த சித்தார்த்!

-

- Advertisement -

1996-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘இந்தியன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார்.

we-r-hiring

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இந்தப் படத்தில் உயிருடன் கொண்டுவரப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் சித்தார்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ” சங்கர் சார் எனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார் விவேக் சார் நடித்துள்ள காட்சிகள் கட்டாயம் படத்தில் இருக்கும் என்று ஷங்கர் சார் உறுதியளித்துள்ளார். விவேக் சார் உடன் எனக்கும் சில காட்சிகள் படத்தில் உள்ளது. இந்தியன் 2 தான் அவரின் கடைசி படம். இது விவேக் சாருக்கு சிறந்த படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்தியன் 2 படத்தில் விவேக்கின் காட்சிகள் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

MUST READ