- Advertisement -
ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது
ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.
கடந்த 2 ஆம் தேதி ஒடிசாவில் பாகநாகா ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில், மீண்டும் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. பார்கார் என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டதில் யாருக்கும் காயம் இல்லை. ஒடிசாவில் கோர விபத்து நடந்த 3 நாட்களில் மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்துள்ளதால் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் விரைவி ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோரமண்டல் விரைவு ரயில் சாலிமருக்கு புறப்பட்டது.