
அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் வனப் பகுதியில் விடக் கோரிய வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவேக்கா ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், யானைக்கு நன்கு பழக்கமான கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு கொண்டுச் செல்லும் வகையில் உத்தரவிடக் கோரியிருந்தார்.
“தமிழகத்தில் வெப்ப அலை வீசும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வழக்கை விசாரித்த சுப்பிரமணியன், விக்டோரியா அமர்வு தமிழக அரசு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையைப் பிடித்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் தாங்கள் நிபுணர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டனர். எனவே, சில அம்சங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.