நடிகர் சித்தார்த் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
சித்தார்த் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் நடித்து முடித்துள்ள டக்கர் திரைப்படம் கடந்த மே 9ஆம் தேதி வெளியானது.

இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படத்தை கோயம்புத்தூரில் இருக்கும் பிராட்வே மாலில் ரசிகர்களிடம் சித்தார்த் பார்த்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சித்தார்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
“நான் முதன் முறையாக ஆக்சன் படத்தில் நடித்திருக்கிறேன். டக்கர் படம் 2K கிட்ஸ்களுக்கு பிடித்த மாதிரியான கமர்சியல் திரைப்படம். இது ஒரு வித்தியாசமான காதல் படம். பாப்கான் சாப்பிட்டுக் கொண்டே ஜாலியாக பார்க்கும் படம். என்னைப் பொறுத்தவரை யாரெல்லாம் இளமையாக நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் இளமை தான் கோவையில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த படத்தை திரையரங்குகளில் வந்து காணுங்கள்.
பொதுமக்கள் பொழுதுபோக்கு படங்களை ரசித்தால் நாங்களும் பொழுதுபோக்கு படங்கள் எடுக்க வசதியாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சித்தார்த்திடம் அரசியல் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு சித்தார்த்” எங்க என்ன பேசணும்னு எனக்கு தெரியும் அத அங்க பேசிக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.