Homeசெய்திகள்சினிமாசத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு... விஜய் ஆண்டனியின் புதிய பட அப்டேட்!

சத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு… விஜய் ஆண்டனியின் புதிய பட அப்டேட்!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது தமிழில் வேகமாக முன்னேறி வருகிறார். கடைசியாக அவர் நடித்து இயக்கி பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழை விட தெலுங்கில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு மற்றும் வசூல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை படைவீரன் படத்தை இயக்கிய தனா இயக்குகிறார்.

we-r-hiring

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஹிட்லர் என்ற தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

MUST READ