spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவாரிசு படம் வெற்றி பெறவேண்டி ஐயப்ப பூஜை

வாரிசு படம் வெற்றி பெறவேண்டி ஐயப்ப பூஜை

-

- Advertisement -

தளபதி விஜய் நடித்த வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்து வழிபாடு செய்த மயிலாடுதுறை பக்தர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பூஜை

we-r-hiring

பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் சமமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து இரு தரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறை சார்ந்த ரசிகர்கள் சுபாஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று அங்கே பதினெட்டாம்படி அருகில் வாரிசு பட பேனரை வாழ்த்தி உயர்த்தி பிடித்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

 

MUST READ