spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராட்சசன் உடன் போட்டி போடும் போர் தொழில்...வசூல் எவ்வளவு தெரியுமா?

ராட்சசன் உடன் போட்டி போடும் போர் தொழில்…வசூல் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘போர் தொழில் ‘ திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் இவர்களுடன் நடிகை நிகிலா விமல் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ஜாப்ஸ் விஜய் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

கிரைம் திரில்லராக வெளிவந்துள்ள இந்த படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இருவரும் தங்களது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

we-r-hiring

இப்படத்தில் இவர்கள் இருவரும் திருச்சி புறநகர் பகுதிகளில் இளம்பெண்களை தொடர்ந்து கொலை செய்யும் கொலையாளியை தேடும் காட்சிகள் வழக்கம்போல் அல்லாமல் வித்தியாசமான கதையில் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தின் துவக்கத்திலேயே கதையின் சுவாரசியம் தொடங்கி கொலையாளியை கண்டுபிடித்த பிறகும் அதே சுவாரஸ்யம் குறையாமல் தொடர்ந்து இந்த படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது.
மேலும் இப்படத்தில் தேவையற்ற சண்டை காட்சிகளோ, பாடல்களோ, வசனங்களோ எதுவுமே இடம்பெறவில்லை.
வசனங்கள் அனைத்தும் திரைக்கதைக்கு பொருத்தமானதாகவே அமைந்துள்ளது.

ராட்சசன் படத்திற்கு பிறகு தற்போது வெளிவந்துள்ள இந்த போர் தொழில் படம் ஒரு பேசும் பொருளாக அமைந்துள்ளது.

இவ்வாறாக இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பி வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரத்தில் வெளியான இந்த படம் 7 நாட்களில் 12.30 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்து வரும் போர் தொழில் திரைப்படம் இந்த வருடத்தின் முக்கிய திரைப்படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

MUST READ